அவர்கள் எங்களை
அப்படித்தான்
பார்ப்பார்கள்.
ஆளைத் தடவித்தான்
அடையாள அட்டையே கேட்பார்கள்.
கீழே போட்டு
குனிந்து எடு
என்பார்கள்.
இதற்காகவே
எப்பொழுதும் - எங்கள்
கழுத்துக்களில் எல்லாம்
சால்வை அணிந்திருப்பவர்கள்
நாங்கள்.
அவர்கள் கண்கள்
எங்கள்
கண்களை மட்டும்
பார்த்ததே இல்லை.
தையல் அக்கா
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்.
இவர்கள் வார்த்தைகள் கூட
ஒரு கன்னியுடன்
கதைப்பதாய் இல்லை.
சொல்களில் கூட - ஒரு
கண்ணியம் இல்லை.
வீதிகளில் எல்லாம் - அவர்கள்
நிற்பார்கள் - நீ
கவனம் என்றாள் அம்மா.
எங்கள்
விதிகளில் கூட எல்லாம்
இவர்கள் தானே நிற்கிறார்கள்??
இவை எல்லாம்
உங்களுக்கு அங்கு
புதுப்பேச்சு,
எங்களுக்கோ இங்கு
பழகிப்போச்சு..
................
22.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் 'கவிதை நேரம்' நிகழ்ச்சியில் 'பழகிப்போச்சு' என்கின்ற தலைப்பில் இடம்பெற்ற எனது கவிதை. இந்தக் கவிதையோடு கவித்தோழன் முகம்மது பாஸ்லி மற்றும் நிந்தவூர் ஷிப்லி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
.
8 comments:
அமல் ராஜ் மிகச் சிறப்பாக இருக்கிறது.யதார்தம் கருவிற்குள் வந்ததாலோ என்னவோ கொஞ்சம் மனக்கஸ்டமாக இருந்தது..இருந்தாலும் உண்மை நிலை இது தானே..
மிக லாவகமாக கருவை நகர்த்திய விதம் மிகப் பிடித்துக் கொண்டது..தொடர வாழ்ததுக்கள்....
தையல் அக்கா
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்.
சங்கடங்களுக்குள் சகஜங்களை தொலைத்திடும் சமகால நிகழ்வினை வரிகளாக்கியிருப்பது மகிழ்ச்சியை தந்தாலும் வாசித்த கணங்களில் ஏதோ ஒரு வலியினை உணர முடிந்தது வாழ்த்துக்கள் கவிஞர் அமல்ராஜ்.
த.எலிசபெத் [Raj suga]
இனிய மாலை வணக்கம் பாஸ்..
காத்திரமான ஒரு கவிதை,
வீதியில் சட்டித் தொப்பி கவிழ்த்த படி நிற்கும் தூக்கு மரங்களாலும்,
எம் சமூகத்தினாலும் பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆத்மார்த்த உணர்வோடு எழுதியிருக்கிறீங்க.
ஒரு பெண்ணாக உங்களை உருவக்கபடுத்தி, (பாவனை செய்து)
அவளின் மீதான சமூகத்தின் பார்வையினை நீங்கள் தத்ரூபமாக எழுதியிருப்பது கவிதைக்கு இன்னும் சிறப்பினைத் தருகின்றது.
வணக்கம் வணக்கம் பாஸ்.. கருத்தெல்லாம் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாஸ்..
ரொம்ப நன்றி ஷைபா அக்கா மற்றும் சுகா
குறிப்பிட்டு சொல்ல முடியாமல்
எல்லா வரிகளும் நன்றாக இருக்கு...
உணர்ந்து எழுதபட்ட வரிகள் ...
வாழ்த்துக்கள் சகோ ....
வலைச்சரம் மூலமாக தங்களை அறிந்தேன். வலி நிறைந்த கவிதை...
வாழ்த்துக்கள்.
Post a Comment