ஒரு
தீயை எப்படி
தீ எரித்தது...?
வியந்துபோனேன் செங்கொடி..
உடலுக்கு
நீ வைத்த
தீ - நீ
இறக்கையில் தீர்ந்தது,
எம் உணர்வுகளுக்குள்
நீ வைத்த
தீ - நீ
இறந்தபின்னும் எரிந்தது.
உன்னை
தட்டி எழுப்பி
ஒன்று சொல்லவேண்டும்.
உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..
உறவுகளை
மதிக்கத் தெரிந்த நீ - உன்
உடலையும்
மதித்திருக்க வேண்டும்.
அந்த
மூவரையும் காப்பாற்ற
நீ
மூச்சுவரை போராடியிருக்கலாம்.
பரவாயில்லை
மூச்சின்றியும் போராடலாம்
மூச்சின் பெறுமானம் தெரிந்தவர்களுடன்..
செங்கொடி,
நீ
வைத்த தீயில்
உன்னோடு சேர்த்து
நீ எரித்தவை
ஏராளம்.
பரவாயில்லை! - உன்
உன் உணர்வுகளையாவது
விட்டு விட்டு போயிருக்கிறாய்
எங்களிடம்..
உனது
ஒற்றைக்கனவு - ஒருவாறு
பலிக்கிறது.
இருந்தும்
நீலம் பாய்ந்த - எம்
குருதிகளும்,
உனது தீயால்
கருகிப்போன - எம்
இதயங்களும்
உன்
உயிர்மேல் ஆணையாய்
தொடர்ந்தும் போராடும் - அவர்கள்
உயிர் பிச்சைக்காய்.
ஆனாலும் - செங்கொடி,
ஒன்றை மட்டும் சொல்கிறோம்,
உனது
உணர்வுகளை வாசிக்கிறோம் - அனால்
உன்னை
உதாரணமாய் யாசிக்க முடியாது.
மன்னித்துக்கொள்.
15 comments:
சகோதரிக்கு எனது அஞ்சலிகளும் வணக்கங்களும் .
உன்னை
தட்டி எழுப்பி
ஒன்று சொல்லவேண்டும்.
உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..//
இனிமேல் இவ்வாறான சேதிகளை தமிழக உறவுகளிடமிருந்து நாம் கேட்கவில்லை......
செங்கொடி,
நீ
வைத்த தீயில்
உன்னோடு சேர்த்து
நீ எரித்தவை
ஏராளம்.//
ம்....ஏதும் செய்வதறியாது,
ஒதுங்கி அச்சத்துடன் வாழும் எம் உணர்வுகளையும் செங்கொடி அவர்கள் சுட்டெரித்திருக்கிறார் என்பதனை தொக்கி நிற்கும் பொருளூடாகப் புலப்படுத்தியிருக்கிறீங்க நண்பா.
சகோதரிக்கு என் வீரவணக்கங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
மனம் கனக்க வைக்கும் கவிதை.வீர வணக்கம் சகோதரி.
நெஞ்சை உருக்கும் கவிதை நண்பா. செங்கொடிக்கு வீரவணக்கம்.
பின்னூட்டம் இடும்போது Word verification கேட்குது. தயவு செய்து Comment setting-ஐ மாற்றுங்களேன்.
உணர்வுகளைப் பகிர்ந்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.
@ கந்தசாமி.
@ நிரூபன்
@ R.Elan.
@ காந்தி பனங்கூர்
@ காந்தி பனங்கூர்.
Settings சரி செய்துவிட்டேன் அண்ணா. இப்பொழுது பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். அப்பை இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். Pls
"உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..."
சாகடித்ததற்கச் சாவும்
சாவைத் தடுப்பதற்கு சாவும்
சரியான முடிவுகளானால
சாவைத் தவிர
எஞ்சுவது வேறென்றிருக்காது.
சகோதரியின் ஆத்ம சாந்திக்கு அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும்..
உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..
'உன்னை
தட்டி எழுப்பி
ஒன்று சொல்லவேண்டும்.
உணர்விற்கு
நீ கொடுத்த மதிப்பை - உன்
உயிருக்கும்
கொடுத்திருக்க வேண்டும்..''
ஆழமான வரிகளுடன் கூடிய உண்மை!
இந்த வரிகள் கவிதையின் கடைசி வரிகளாக வந்திருக்க வேண்டும்
மிக்க நன்றி நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு.
நிச்சயமாக மேமன் கவி ஐயா.. நான் அதை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். மிக அழகாக இருக்கிறது கவிதையின் முடிவு.. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
Super kavithai
நல்ல கவிதை
நல்ல பதிவு இதையும் வாசியுங்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை – மூன்று முக்கிய குற்றவாளிகள்
Post a Comment