Wednesday, August 24, 2011

புராதன இந்தியா!! 100 ஆண்டுகளுக்கு முன்..

இந்த பதிவு எனது சகல இந்திய நண்பர்களுக்குமானது. சில அரசியல், ஊழல், சாதியம், தீண்டாமை, மூடநம்பிக்கை, ஈழத்தமிழர் மீதான அக்கறை போன்ற விடயங்களை தவிர்த்து இந்தியாவை மற்றவர்கள் போல எனக்கும் அதிகம் பிடிக்கும். நிலப்பரப்பு (நிலப்பரப்பில் இந்தியா உலகத்தில் ஏழாம் இடத்தில் இருப்பது தெரிந்ததே), சனத்தொகை (உலகத்தில் இரண்டாவது சனத்தொகை கூடிய நாடு - 1.2 பில்லியன் இற்கும் அதிகம்), கலாச்சார, மொழி, இன பல்வகைமை போன்ற காரணிகளில் பரந்து விரிந்து நிற்கும் ஒரு தெற்காசிய நாடு நம்ம இந்தியா.

சாதாரணமாகவே எமது நாடு என்பது ஏதோ ஒருவகை தன்னிலை உணர்வை மனங்களில் அள்ளி வீசக்கூடிய ஒரு விடயம். அந்தவகையில் எங்கு சென்றாலும் எமது நாட்டிற்கு இணை, ஈடு எம் நாடுதான். அதிலும் எமது நாடுகளின் இயற்கை அழகு, புராதனம், கலாச்சாரம், மொழி போன்ற விடயங்கள் தனித்துவம் மிக்கவையாகவும் எமக்கு பெருமை சேர்ப்பனவாகவும் இருந்து விடுகின்றன. அந்த வகையில் இலங்கையைப் போலவே இந்தியாவும் ஒரு அழகிய நாடு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்கு சான்றாக பல பகுதிகளை குறிப்பிடலாம்.

விடயத்திற்கு வருவோம். (ரொம்ப அலட்டிடேனோ..?? சாரிங்க ..)

இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எமது மூதாதேயரை சந்திக்கின்ற பாக்கியம் எம்மைப் போன்றவர்களுக்கு கிடைக்கவே இல்லை. சிலவேளைகளில் கேள்விப் படக் கூட சந்தர்ப்பங்கள் இல்லாமல் போய்விடுகிறது. அப்படியிருக்க அவர்கள் காலத்தில் நம்ம இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவல் இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த உதவியை இன்று நான் செய்கிறேன்.. (தேங்க்ஸ் எல்லாம் வேணாமுங்க.. விடுங்க விடுங்க)

100 ஆண்டுகளுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது..? இந்த புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது நாமும் கொஞ்சம் அந்தநாட்களில் வாழ்ந்திருக்கலாமோ என்று தோணுவதோடு 100 ஆண்டுகளில் இவ்வளவு மாற்றமா என்று வாய் பிளக்கவும் வைக்கிறது. சரி படங்கள பாக்கலாம் வாங்க..

















அடுத்து நம்ம புராதன இலங்கை பற்றிய படங்களும் வருகிறது... எல்லாம் அங்க இங்க சுட்டதுதான்...

7 comments:

சார்வாகன் said...

அருமை சகோ நன்றி

குடந்தை அன்புமணி said...

பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html

காந்தி பனங்கூர் said...

காணக்கிடைக்காத புகைப்படங்கள். தேங்க்ஸ் வேணாம்னு சொல்லிட்டீங்க.அதனால நன்றி சொல்லுறேன்.
www.panangoor.blogspot.com

siva said...

அபூர்வ புகைப்படங்களைப் பதிவாக்கியமைக்கு நன்றி. பார்த்தேன் ரசித்தேன்

பி.அமல்ராஜ் said...

மிக்க நன்றி
@சார்வாகன்,
@குடந்தை அன்பு மணி,
@காந்தி பனங்கூர்,
@சிவா...

♔ம.தி.சுதா♔ said...

இதுவரை நான் காணாத படங்கள் மிக்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

பி.அமல்ராஜ் said...

@ மதி சுதா

மிக்க நன்றி மதி சுதா..

Popular Posts