Wednesday, July 6, 2011

கெஞ்சல் தொழுகை

ஜூலை மாத காற்றுவெளி இணைய இதழில் 40, 41 ஆவது பக்கங்களில் வெளியான 'கெஞ்சல் தொழுகை' என்கின்ற எனது கவிதை. நன்றி காற்றுவெளி



எம்
உடல் நசுக்கி
உவகை கொண்டீர்கள்.
கையெடுத்து வணங்கினோம்,
கவனம் காட்டினீர்கள். - பின்னர்
முகத்தில் ஏறி
முழியை பிய்த்தீர்கள்
முனங்கி பார்த்தோம்
முறைத்துப் பார்த்தீர்கள்.
இவற்றை விட,
தலையை திருகி
தாவணிகளை சிதைத்து
பாதணிகளாய் மிதித்தீர்கள்.
தலை தூக்கி கேட்டோம்
தலைவேண்டுமா என்றீர்கள்..

இத்தனைக்கும் நாங்கள்
இடைவிடாது அழுதோம்
கேஞ்சித்தொளுதோம்
நீங்கள் சொன்னது எல்லாம்
'பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை'

உங்கள்
விடுதலையின் இறுதியில் - எங்கள்
'உரிமை' என்பதெல்லாம்
ஒரு வாய்
கஞ்சிக்குக் கூட
கடன் வைத்துப் போனதே??

களைஎடுத்தீர்கள்
நன்மைதான் - ஆனால்
நாற்றைக் கொஞ்சம் விட்டிருக்கலாம்.
காற்று வீசினீர்கள்
மகிழ்ந்தோம்
ஆனால் இறுதியில் - எம்
அரிக்கன்லாம்புகளையும் அணைத்துப் போனீர்களே..

விடுதலை தருவதாய்
விதிமேல் இட்டீர்கள் ஆணை.
விட்டுப் பார்த்தோம்..
கடைசியில்
விதிமேல் இட்டீர்களே வலி
அது - இப்போ
குருதி கலந்து
குழாய்கள் ஏறி
குமுறிச் சொல்கிறது
'சுதந்திரம் வேண்டும்'.


இக்கவிதையை காற்றுவெளி இதழில் பார்வையிட
http://kaatruveli-ithazh.blogspot.com/

1 comment:

Anonymous said...

எளிமையான ஆனால் ஆழமான வரிகள் -
பேனாவை கண்டிக்காமல் அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள்,மேலும் பல கிறுக்கல்கள் சித்திரமாகி, வேர்களும் பூக்க வேண்டும்.

Popular Posts