Monday, July 25, 2011

கடவுளும் கண்மூடிய கறுப்பு ஜூலை.


இலங்கையின் இரத்த வடுக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாட்கள் ஜூலை 24 தொடக்கம் ஜூலை 26 வரையான கறுப்பு நாட்கள். கொழுந்து விட்டு எரிந்த நெருப்புச் சுவாலைகளில் கருகிப்போன ஆத்மாக்களை மறக்க முடியாமல், இன்றும் மனங்களில் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். இலங்கை ராணுவத்தின் 13 வீரர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காய் அந்த மூன்றே மூன்று நாட்களில் தெருக்களில் வீசப்பட்ட வெற்றுடல்கள் 400 இலிருந்து 3000 வரை, நாசமாக்கப்பட்ட வீடுகள் பத்தாயிரத்துக்கும் மேல், காயப்பட்டவர்கள் 25000௦ இற்கும் அதிகம். ஆக 13 உயிர்களுக்கான பழிவாங்கல்கள் இவை.


இந்த கொடூரமான சம்பவம் 1983 இல் நடந்தேறியிருந்தாலும் இன்றும் அந்த சம்பவங்களையும் புகைப் படங்களையும் பார்க்கும் பொழுது கண்கள் வலிக்கின்றன. இது வெறுமனே ஒரு பழிவாங்கலா அல்லது தமிழ் இனத்திற்கான ஒரு திட்டமிட்ட சதியா என்பதற்கு அப்பால் இது ஒரு கொடூரமான மனித உரிமை மீறல் என்றே அன்றும் இன்றும் பேசப்பட்டன. எதற்காகவும் மனிதன் சட்டத்தையும் தீர்ப்பையும் கையில் எடுக்க கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகவே கொள்ளப்படுகிறது. இலங்கையின் இந்த கறை படிந்த சம்பவமே நீண்டகால தமிழ் சிங்கள ஆயுத போராட்டத்திற்கு வித்திட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஒரு தவறு இன்று 30 வருட கொடூர யுத்தத்திற்கும், இலட்சக் கணக்கான இறப்புக்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. சாதாரணமாக சிந்தித்துப் பார்த்தால், அவ்வாறானவொரு கலவரம் நடைபெற்றிருக்காவிடில் இத்தனை கால யுத்தம் இத்தனை கொடூரங்களை கொடுத்திருக்குமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இந்த ஜூலை கலவரம் என பேசப்படும் சம்பவம் வெறுமனே ஒரு சம்பவத்தோடு தொடர்பு பட்டவை அல்ல. யாழ்ப்பாணம் திருநெல்வேலி தாக்குதல் சம்பவம் (ஜூலை 23 1983) தொடங்கி 28 ஜூலை 1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் முறையாக 15 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி வரை பல வகையான கோர்ப்பு சம்பவங்களின் நிகழ்ச்சியே இந்த ஜூலை கலவரம். 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கர்த்தால் போலீசார் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டையும் மீறி (??) நடைமுறைக்கு சாத்தியமற்றதாக மாறியதே இத்தனை இறுதிக்கட்ட கலவரங்களுக்கும் மூல காரணமாய் மாறியதாக சொல்லப்படுகிறது. அந்த கணம் தொடக்கம் 'இன கலவரம்' தீப்பிழம்பாய் கொழுந்துவிட ஆரம்பித்ததன் விளைவு வீதிகளில் பயணித்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களுக்குள்ளும், வீடுகளிட்குள்ளும், தங்கள் வியாபார பணித் தளங்களினுள்ளும் அடைபட்ட தமிழர்கள் தீமூட்டப்பட்டனர். இதுவே ஜூலை கலவரத்தின் மிக முக்கியமான சம்பவமாக குறிப்பிடப்படுகிறது. இன கிளர்ச்சிக்காரருக்கு அன்று கூரான கத்திகளும், பொல்லுத் தடிகளும், நெருப்பும், ஆயுதங்களும் தமிழரை கொல்வதற்கு போதுமான ஆயுதங்களாக இருந்தன.


இந்த கறை படிந்த நிகழ்வு நடந்தேறி இன்றோடு 28 வருடங்கள் முடிகிறது. அன்று கொடூரமாக கொல்லப்பட்ட எம் சகோதரர்களின் ஓலமோ என்னவோ எங்களை இன்றும் நின்மதியின்றியே வாழ வழிவிட்டிருக்கிறது. இன்றும் அந்த சோக நிகழ்வை எண்ணி கண்ணீர்விடும் எங்கள் பெரியவர்களின் ஏக்கங்கள் இன்னும் துடைக்கப் பட்டதாய் தெரியவில்லை. வாள் எடுத்தவன் வாளாலே சாவான் என்பதும், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதும் நமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க உதவியாக இருக்கின்ற இரு பெரும் நம்பிக்கை வாசகங்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது. அதைவிட இந்த கறுப்பு ஜூலை கலவரத்திற்கு முன்னையதான சில சம்பவங்கள் நாட்டின் அதிகமான சிங்கள சகோதரர்களுக்கு தமிழர் என்றால் புலிகள் என்கின்ற எண்ணத்தையும், தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்கின்ற மனக் கணக்கையும், தமிழர்கள் பயங்கரமான, கொடூரமான இனத்தவர் என்கின்ற மாயையையும் தோற்றுவிக்க ஏதுவாக அமைந்தன. அதன் விளைவு தமிழர்களை விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யவேண்டும் என்கின்ற பௌத்த தர்மத்திற்கு எதிரான மனப் பக்குவத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றது.

இனியும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்பதே எமது மக்களின் மன்றாட்டம். எரிக்கப்பட்ட உயிர்கள் போதும். இனியும் இப்படியொரு கறுப்பு ஜூலை உருவதற்கான சூழலை யாரும் உருவாக்க வேண்டாம். எங்களது பிள்ளைகளுக்கு ஒரே ஒரு கறுப்பு ஜூலை போதும். அவர்கள் வரலாற்றுப் பாடத்தில் கறுப்பு ஜூலை 1, கருப்பு ஜூலை 2 என குழப்பம் விளைவிக்க வேண்டாம். இதுவே எனதும், எமது மக்களதும் இந்த கறுப்பு ஜூலை தின மன்றாட்டம் ஆகும்.

Friday, July 22, 2011

என் மண்டையைப் பிய்த்த காதல்.

அன்று மாலை ஆறு கடந்து ஏழு ஆகிக்கொண்டிருந்தது. எனது காரில் நானும் எனது நண்பன் ஒருத்தனும், நண்பனின் ஒருத்தியை (??) பார்ப்பதற்காய் நண்பனின் வீட்டிலிருந்து, நண்பன் காட்டும் பாதை வழியே பயணித்தோம். அது நீண்டநாள் சஸ்பென்ஸ். அவன் அநேகமான நேரங்களை தொலைபேசியில் செலவழிப்பது எனக்கு நன்றாகவே தெரியும். மணிக்கணக்கில் கதைப்பதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நேர்த்தியாக காய் வெட்டிவிட்டு வெளியே போவதும் எனக்கு நன்றாகவே பரீட்சயமான விடயங்கள்.

அன்று, எனக்கும் அவனுக்கும் ஒரு ஒப்பந்தம். அது வேறு ஒன்றும் இல்லை,அவன் இற்றைவரை ஏதோவொரு உறவுமுறையுடன் பழகிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணை நான் பார்த்தாக வேண்டும் என்பதுதான். அந்த மணிக்கணக்கில் தொலைபேசியோடு குடும்பம் நடத்தும் அந்த அழகிய தமிழ் மகள் யார் என்று பார்த்தாகவேண்டும் என்பதில் நான் அதிகம் அக்கறையாகவே இருந்தேன். போய்சேரவேண்டிய இடம் வந்தது. அது வேற ஒரு இடமும் இல்லேங்க, நம்ம KFC தான். வலப்பக்கம் நான், இடப்பக்கம் அவன். பின்னர் எனது வலப்பக்க இருக்கையை பறித்து அவளுக்கு கொடுக்க நான் அவர்களுக்கு முன்னால் இடம்மாற்றப்பட்டேன்.

எனது முதல் வார்த்தை 'ஹாய்'. அவளிடமிருந்து 'ஹலோ'. இரண்டாவது வார்த்தை 'ஹொவ் ஆர் யு?' அதற்கு அவள் 'நான் நல்ல சுகம் அண்ணா'. அடகடவுளே, எனக்கு மொக்கைய போடவென்றே வந்தமாதிரி இருக்கே என நினைத்துக்கொண்டேன். 'சரி, 'உங்களுக்கும் இந்த சேருக்கும் என்னங்க உறவு?' இது நான். அதுக்கு அவள் 'அத அவரிடமே கேக்கவேண்டியதுதானே..' அதுதான் சரி. என்ன கொடும சார் இது. கேகிறத்துக்கு எல்லாம் ஒரு குதர்கமாவே பதில் சொன்னா நான் எப்பிடிங்க பிழைப்பு நடத்துறது?. 'சரி நீ சொல்லுடா, லவ்வா?'

அதுக்கு சிம்பிளா நண்பன் ஒரு பதில் சொன்னான் பாருங்க. 'ஆமாடா லவ்வுதான், ஆனா அவக்கு வாறமாசம் கலியாணம். இந்தெல்லாம் இன்னொரு ஒரு மாசத்துக்குத்தான்....'

'என்னது, உனக்கும் அவக்கும் லவ்வு, ஆனா அவக்கும் இன்னொருத்தனுக்கும் கல்யாணமா...???'.நான் முரட்டுத் தனமாய் கேட்க ௦'என்ன பண்றது மச்சான், கலியாணம் கட்டத்தான் முடியல, லவ்வாவது பண்ணுவமே... அதுக்காவது குடுத்து வைச்சிருக்கே..' சலித்துக்கொண்டான் நண்பன். (பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருந்திச்சு..)எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடைய மண்டை கிறுகிறுக்க அவர்கள் இருவரும் ஒரே ஐஸ் கிரீமை ஒய்யாரமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


உடனே அந்த பெண்ணை திரும்பிப் பார்த்தேன். நான் கேட்காமலே 'இவர் சொல்லவதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேற ஒன்றும் இல்லை.' என்கிறமாரி அவ மண்டையை மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

இதெல்லாம் ஒரு பிழைப்பு என எண்ணிக்கொண்டு அந்த 'சாஜஹான் மும்தாஜ்' காதலில் குழப்பம் விளைவிக்காமல் நான் சற்று வெளியேறி எனது காருக்குள் அமர்ந்துகொண்டேன். தனியே இருப்பதால் அவர்கள் வருவதற்குள் ஒரு பாட்டை கேட்டுவிடுவோம், அப்பொழுதாவது நம்ம கடுப்பு கொஞ்சம் குறையட்டும் என பாட்டுப் பெட்டியை ஒன் செய்தபோது 'ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே...' என பாடிக்கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியம்.

ஐயோ அக்காமாரே, அப்படி பார்காதேங்கோ... நான் சத்தியமா KFC குள் நடப்பதற்கும் இந்த பாடலுக்கும் முடிச்சுப் போட்டு பார்க்கேலேங்க.

காதல் என்பது இப்பொழுதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே போய்விட்டது. காதலை பற்றி புனிதம், அது, இது என்றெல்லாம் கதைகள் சொன்ன காலம் போய் இப்பொழுதெல்லாம், கலியாணம் கட்டும் வரை சந்தோசமாக இருப்பதற்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கக் கூடிய ஒரு நல்ல ஊடகம் என ஆகிப் போச்சு.அதுவும் இன்றைய நாளை காதலியுடனோ அல்லது காதலனுடனோ சந்தோசமாக செலவளித்திட வேண்டும் என்பதில் தான் கவனமாக இருக்கிறார்களே தவிர நீண்டு பரந்து விரிந்து கிடக்கும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பது மிகக் குறைவு. சரி விடுங்க. அவர் அவரது வாழ்க்கை அவர் அவரது கைகளில்.

இங்கே 80 வீதமான உண்மை சம்பவத்திற்கு 20 வீதம் சோடனை செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

Wednesday, July 20, 2011

What do the road signs tel you?? an interesting story...

Whoever came up with this storyline is a genius!
What must this guy have scored in his driving test !

We had heard enough stories with relevant pictures in our childhood. And also we had lessons which the teacher asked us to tell a story by following the pictures. Therefore, we are well experienced in it at our childhood.

Here a friend had created an amazing story following the road signs... OMG.. He is totally crazy but the story is very interesting..

I am wondering that is there people with such creativity among us.. But definitely I am not.. The chain of the story following by the each road sings is very interesting and I let you to experience the story with the pictures..

If is it too small, I encourage you to download the picture first and read it. OR Click on the picture and you will find an expanded one.

யப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..

புகைப்பட கலை என்பது கலைகளிலே மிக நுணுக்கம் வாய்ந்த ஒன்று. அதிலும் இன்றைய தொழில் நுட்ப புகைப்பட கலை என்பது அக்கலையை வேறொரு தளத்திற்கு கொண்டு கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இந்த கலையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

சிலர் இதிலே கொடிகட்டி பறக்கும்அளவுக்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்தவகையில் அண்மையில் எனது கரம் கிடைத்த சில ஆச்சரியமான புகைப்படங்களை இங்கே இடுகிறேன். பார்த்து மகிழுங்கள். வியந்து போவீர்கள். இந்த புகைப்பட கலைஞருக்கு எனது சலூட்.

இந்த படங்களிலே முக்கியமாக விடயம் என்னவென்றால், அரை அல்லது ஒரு நொடியில் (Second) எடுக்கப்பட்ட வேண்டிய காட்சிகள். அந்த அரை அல்லது ஒரு செக்கனை தவறவிடும் பட்சத்தில் இவ்வாறான புகைப்படங்களை இந்த உலகம் பார்க்கமுடியாமல் போய்விடும்.

Good timing என்று சொல்லுவோமே, அந்த பிரமாதமான, நம்ப முடியாத good timing தான் இந்த படங்களின் பிறப்புக்கு அடித்தளம்.

வாருங்கள் வியக்கலாம்..


எப்பூடி... சூப்பர் இல்ல..?? அது..

Monday, July 18, 2011

'இருக்கிறம்' பத்திரிகையில் எனது கவிதை நூல் பற்றிய ரசனை/அறிமுகக் குறிப்பு

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையான 'இருக்கிறம்' பத்திரிகையின் ஜூலை மாத 16 ஆவது இதழில் வெளியாகியிருக்கும் எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' கவிதை நூலின் இரசனைக்குறிப்பு இதோ. இந்த ரசனைக்குறிப்பை எழுதிய எனது (எமது) அன்பிற்குரிய கவிதாயினி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதை பிரசுரித்த 'இருக்கிறம்' பத்திரிகையின் பதிப்பாசிரியருக்கும் எனது நன்றிகள். இதை அவ் இருக்கிறம் இதழின் 16 ஆவது பக்கத்தில் காணலாம்.கவனிக்க: இதை தரவிறக்கி பார்ப்பின் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்கும்.

Sunday, July 17, 2011

அவநம்பிக்கை


மேகமே,
உன்னை தாங்க
நாங்கள் தயார்தான்.
நீதான் - எங்கள்
கைகளை விட
அந்த வானத்தை
அதிகம் நம்புகிறாய்.
உன் சந்தேகம் சரிதான்.
எங்கள்
சுகந்திரத்தையே
தக்கவைத்துக்கொள்ள - எங்கள்
கரங்களால் முடியவில்லை..
உன்னை எப்படி???

Wednesday, July 13, 2011

நான் ரசித்த வைரமுத்து..

வைரமுத்து.. வாதம் வந்த நாக்கு கூட எழுந்து நின்று உச்சரிக்கும் பெயர். புராதன கவிதையை விஞ்ஞானத்தோடு, காலத்தையும் கடந்து மூச்சுவிட வைத்த மனிதர் இவர். சிறுசுகள் தொடங்கி பெருசுகள் வரை அனைவரையும் ஒரே ரசனையால் கட்டிபோட்டிருக்கும் ஒரு கவிதைச் சக்கரவர்த்தி. மற்றவர்கள் போலவே சிறுவயது தொடங்கி வைரமுத்து கவிதைகளில் அப்படியொரு லவ்ஸ் எனக்கு. 9 ஆம் ஆண்டில் தமிழ் புத்தகத்திற்குள் மறைத்துவைத்து நான் படித்த 'ரத்ததானம்' இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குறது.வைரமுத்துவின் ஒரு கவிதை நூல் இது. என்னை அதிகம் ஆட்கொண்ட வைரமுத்து நூல்களில் இந்த ரத்ததானத்திட்கு அதிகம் பங்கு உண்டு. அதேபோல என்னை வைரமுத்துவின் முரட்டுத்தனமான ரசிகனாக மாற்றிய ஒரு கவிதை நூல் 'இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல'. இல்லாவிட்டாலும் ஒரு 5 தடவைகளுக்கு மேலாவது இந்த புத்தகத்தை படித்திருப்பேன்.

இந்த கவிதை ஞானி 1953 இல் பிறந்தது வடுகப்பட்டி என்னும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில். இவரைப்பற்றிய அறிமுகத்திற்கு அதிகம் அலட்டிக்கொள்வதை விட ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிவிட்டால் போதும் என்கிறார்கள் பலர். அதாவது 6 தடவைகள் தேசிய விருதை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கும் விடயம்தானுங்க. இந்தியாவில் ஒரு கவிஞர் இத்தனை தடவைகள் தேசிய விருதுகளை பெற்றது இதுதான் முதல் தடவை என்பது முக்கியமான விடயம்.

வைரமுத்துவின் புத்தகங்களில் அநேகமான புத்தகங்கள் எனது புத்தக அடுக்குகளில் அலாதியாக அமர்ந்திருக்கின்றன. அதற்கு நான் மட்டும் காரணமல்ல. எனது மூத்த சகோதரரும் வைரமுத்துவின் பித்தன். என்னை அதிகம் கவர்ந்த புத்தகங்கள் என்று 'திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்', 'கல்வெட்டுக்கள்' போன்றவற்றை என்னால் சொல்லமுடியும். என்னை ரொம்ப பாதித்த கவிதைகள் என்றால் அது நிச்சயமாக 'ரத்ததானம்' கொண்டுவந்த கவிதைகள்தான். கவிதைகளை விட வைரமுத்துவின் நாவல்களும் மிகப் பிரபல்யம். என்னை அதிகம் கவர்ந்த நாவல் 'வில்லோடு வா நிலாவே'. அருமையான கதை, புல்லரிக்கும் வார்த்தையாலங்கள். இன்னும் என்னால் வாசித்து முடிக்க முடியாமல் என் மேசையில் கவிழ்ந்த படி தூங்கும் வைரமுத்து புத்தகம் 'கள்ளிக்காட்டு இதிகாசம்'.

கவித்துவம், ரசனை, சொல்விளையாடல், வார்த்தை ஜாலங்கள், எதுகை மோனை அசைவுகள், ஒலி ஒத்துகை, சொல் பொருந்துகை, பொருள் பிறழாமை என கவிதைக்களுக்குரிய அனைத்து இயல்புகளும் வெளிப்படையாகவே இவர் கவிதைகளில் ஏறி அமர்ந்திருக்கும். இதுவே இவரை கவிப்பேரரசு என அழைக்க பிள்ளையார் சுழி போட்டவை.

ஏனைய இந்திய கவிஞர்களில் நின்று வைரமுத்து வேறுபட்டு தனித்துவத்தோடு நிற்பதற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. மிகமுக்கியமான ஒன்று, பிராதன கவிதையை நவீன விஞ்ஞான, ஆராட்சி தளத்திற்கு கொண்டுசென்றமை. பல விஞ்ஞான நவீனத்துவ விடயங்களை கவிதைக்குள் மிக இலாவகரமாக கொண்டுவந்து சிந்திக்க வைப்பது இவர் யுக்திகளில் ஒன்று. இதற்காக அவர் எவ்வளவு விடயங்களை இன்னும் படிக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒரு கவிதையில் வைரமுத்து சொல்லவதை போல 'என்னை புத்தகம் இல்லாத அறைக்குள் பூட்டிவிடுங்கள், நானாகவே மரித்துவிடுவேன்..' வைரமுத்துவின் பலம் எழுதுவதை விட அதிகம் வாசிப்பது.

என் மனது இறங்கி, கவிதையோடு காதல் புரிந்து என்னையும் எழுதத்தூண்டிய சில வைரமுத்துவின் (என்) மானசீக கவிதைகள்.
---------------------------
கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!
---------------------
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
----------------------

மௌன பூகம்பம்


அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்


பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
------------

இப்படி எத்தனை கவிதைகளைதானுங்க இதில பதிய முடியும்.. இது போதும் இம்முறை.

வைரமுத்துவின் ஒரு தீவிர ரசிகன் என்கின்ற வகையில் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

DADS, you must read this story.. pls..

A man came home from work late, tired and irritated, to
find his 5-year old son waiting for him at the door.
SON: 'Daddy, may I ask you a question?'

DAD: 'Yeah sure, what it is?' replied the man.

SON: 'Daddy, how much do you make an hour?'

DAD: 'That's none of your business. Why do you ask
such a thing?' the man said angrily..

SON: 'I just want to
know. Please tell me, how much do you make an hour?'

DAD: 'If you must know, I make $50 an hour.'

SON: 'Oh,' the little boy replied, with
his head down.

SON: 'Daddy, may I please borrow $25?'

The father was furious, 'If the only reason you asked
that is so you can borrow some money to buy a silly toy or
some other nonsense, then you march yourself straight to
your room and go to bed. Think about why you are being so
selfish. I don't work hard everyday for such childish
frivolities. '

The little boy quietly went to his room and shut the door.

The man sat down and started to get even angrier about the
little boy's questions. How dare he ask such questions
only to get some money?

After about an hour or so, the man had calmed down , and
started to think:

Maybe there was something he really needed to buy
with that $25.00 and he really didn't ask for money
very often The man went to the door of the little boy's
room and opened the door.

'Are you asleep, son?' He asked.

'No daddy, I'm awake,' replied the boy.

'I've been thinking, maybe I was too hard on you
earlier' said the man. 'It's been a long day and
I took out my aggravation on you. Here's the $25 you
asked for.'

The little boy sat straight up, smiling. 'Oh, thank you
daddy!' he yelled. Then, reaching under his pillow he
pulled out some crumpled up bills.

The man saw that the boy already had money, started to get
angry again.

The little boy slowly counted out his money, and then
looked up at his father.

'Why do you want more money if you already have
some?' the father grumbled.

'Because I didn't have enough, but now I do,'
the little boy replied.

'Daddy, I have $50 now. Can I buy an hour of
your time? Please come home early tomorrow. I would like
to have dinner with you.'

The father was crushed. He put his arms around his little
son, and he begged for his forgiveness.

It's just a short reminder to all of you working so
hard in life. We should not let time slip through our
fingers without having spent some time with those who really
matter to us, those close to our hearts. Do remember to
share that $50 worth of your time with someone you love.


If we die tomorrow, the company that we are working for
could easily replace us in a matter of hours. But the family
& friends we leave behind will feel the loss for the
rest of their lives.

Thanks Vy.

Thursday, July 7, 2011

ஓ மங்கையே,

ஓ மங்கையே,
நம்
போராட்ட வரலாறு
கசக்கி வீசப்பட்ட - உன்
பிணத்தோடேயே முடிந்திடட்டும்.

உன் ஆடை அவிழ்கையில்
அவர்கள் சுதந்திரம்
சிரித்தது.
உன் துணி விலக்கி - உன்
பனித்தேகத்தில்
பன்றிகள் புரண்டபோது
ஈழப்போராட்டம்
தலைகுனித்து நின்றது.

ஐயோ பாவம்,
யாரோ
வைத்துப்போன தீயில்
இறுதியாக தீர்ந்தது
உனது தேகம்.

உனது
பிணத்தைக் கூட
விடாமல் புணர்ந்தவன்
பிரமாதம் என்றான்.

காம நரிகள் - உன்
இடைகளில் ஏற,
காட்டெருமைகள் சில - உன்
கைகளை பற்ற,
அக்கரும அரக்கர்கள் - உன்
அங்கங்களை அமுக்க,
துட்டகைமுனுக்கள் - உன்னை
கதற கதற கற்பழித்தனர்.

நீ இட்ட ஓலம்
மேகத்தை கலைக்க,
அவர்கள் ஏற்றிய
சுதந்திரக்கொடி மட்டும் - மானம்விட்டு
பறந்தது வானில்.

உன்னை புதைத்த
இடத்தில் அவர்கள்
மகாபோதி நட்டனர்.
பின்னர் அதற்கு
கீழே புத்தர்
சிலையும் வைத்தனர்.

இப்போ அது -
அவர்களுக்கோ கடவுள் வாழும் கோவில்
எங்களுக்கோ நீ வாழும் கல்லறை.

Wednesday, July 6, 2011

கெஞ்சல் தொழுகை

ஜூலை மாத காற்றுவெளி இணைய இதழில் 40, 41 ஆவது பக்கங்களில் வெளியான 'கெஞ்சல் தொழுகை' என்கின்ற எனது கவிதை. நன்றி காற்றுவெளிஎம்
உடல் நசுக்கி
உவகை கொண்டீர்கள்.
கையெடுத்து வணங்கினோம்,
கவனம் காட்டினீர்கள். - பின்னர்
முகத்தில் ஏறி
முழியை பிய்த்தீர்கள்
முனங்கி பார்த்தோம்
முறைத்துப் பார்த்தீர்கள்.
இவற்றை விட,
தலையை திருகி
தாவணிகளை சிதைத்து
பாதணிகளாய் மிதித்தீர்கள்.
தலை தூக்கி கேட்டோம்
தலைவேண்டுமா என்றீர்கள்..

இத்தனைக்கும் நாங்கள்
இடைவிடாது அழுதோம்
கேஞ்சித்தொளுதோம்
நீங்கள் சொன்னது எல்லாம்
'பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை'

உங்கள்
விடுதலையின் இறுதியில் - எங்கள்
'உரிமை' என்பதெல்லாம்
ஒரு வாய்
கஞ்சிக்குக் கூட
கடன் வைத்துப் போனதே??

களைஎடுத்தீர்கள்
நன்மைதான் - ஆனால்
நாற்றைக் கொஞ்சம் விட்டிருக்கலாம்.
காற்று வீசினீர்கள்
மகிழ்ந்தோம்
ஆனால் இறுதியில் - எம்
அரிக்கன்லாம்புகளையும் அணைத்துப் போனீர்களே..

விடுதலை தருவதாய்
விதிமேல் இட்டீர்கள் ஆணை.
விட்டுப் பார்த்தோம்..
கடைசியில்
விதிமேல் இட்டீர்களே வலி
அது - இப்போ
குருதி கலந்து
குழாய்கள் ஏறி
குமுறிச் சொல்கிறது
'சுதந்திரம் வேண்டும்'.


இக்கவிதையை காற்றுவெளி இதழில் பார்வையிட
http://kaatruveli-ithazh.blogspot.com/

தலையாட்டி மச்சானே..

என்னை
காட்டிக்கொடுத்த கனவானே,

இந்த கம்பிகள்
துருப்பிடிப்பதற்குள்ளாவது
இது
புலியல்ல
பூனை என்பதை
இவர்களுக்கு சொல்லிவிடு.

உன் தலையாட்டத்தில்
என் தலைவிதி
எப்படியானது
பார்த்தாயா?

ஒருமுறை
இங்கே வந்துபார்..
நீ
ஆங்காங்கே தலையாட்டியதில் - இங்கு
ஐம்பது தலை சேர்ந்திருக்கிறது - உனக்கு
ஐம்பது லட்சம் தேறியிருக்கும்.

நீ என்னை
காட்டிக்கொடுக்கையில்
என்கையிலிருந்த - என்
ஆறுமாத குழந்தை
அப்பா சொல்லி அலறியதை பார்த்தாயா?

இதற்கு முதல்
நான் - உன்னை
எங்கோ பார்த்து
ஒருமுறை சிரித்திருக்கிறேன்.
அவ்வளவுதான்.
உன்னோடு
ஒருவருடம் பழகியதாய்
ஒப்பமிட்டிருக்கிறாய்
எனது
குற்றப்பத்திரத்தில்.

நண்பனே,
உனக்கென்ன?
நஷ்டம் இல்லாத தொழில்.
தலையை ஆட்டியே
தாராளமாய் உழைக்கிறாய்..
ஒன்றை பார்த்தாயா?
என் பிள்ளை விடும்
கொட்டாவியில்தான்
உன் பிள்ளைவிடும் ஏப்பம்
குளிர்காய்கிறது
நமது ஊரில்.

நீ ஒரு
வித்தைக்காரன்தான்.
வன்னியில்,
பல்லிகள் கூட
உன் தலையாட்டத்தில்
புலிகள் ஆகிறதே..

உன்
மனைவியைவிட
இவர்கள் - உன்னை
அதிகம் நம்புகிறார்கள்.
நீ சொல்லும்
பொய்களிலெல்லாம் அவர்களுக்கு
கவலை இல்லை.
உண்மை பேசிவிடுவியோ
எனபது மட்டும்தான்
இப்போதைக்கு
அவர்களின் பயம்.

Popular Posts